4 மணிநேரமாக பதில் வரவில்லை! உயிர் தோழி செய்த தரமான சம்பவம்
தன்னுடைய தோழி 4 மணிநேரமாக மெசேஜ் ஏதும் அனுப்பாததால் அவருடைய வீட்டுக்கு டிரோனை அனுப்பிய நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
அந்த பாசக்கார தோழியின் பெயர் Wan, இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் சமூகவலைத்தளமான WeChatல் கடந்த 22ம் தேதி காலை 7 மணியன்று அவரது தோழிக்கு மெசேஜ் செய்துள்ளார்.
அவரும் பதிலுக்கு அருகிலுள்ள மருந்து கடைக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, அவரது தோழி என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 2 தடவை போன் செய்து விட்டேன், ஏன் எடுக்கவில்லை? என பல மெசேஜ்கள் அனுப்பியும் Wan பதில் ஏதும் அனுப்பாமல் இருந்துள்ளார்.
Image: Baidu
4 மணிநேரம் ஆகியும் பதில் ஏதும் இல்லாததால், உடனடியாக அவரது கணவரை தொடர்பு கொண்டு டிரோனை Wanன் வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்படி டிரோனும் Wan வீட்டு ஜன்னல் அருகே வர தூக்க கலக்கத்தில் இருந்த Wan வெளியே வந்து பார்த்துள்ளார்.
இருவரது வீடும் அருகருகே இருப்பதால் சில நிமிடங்களில் டிரோனும் Wanன் வீட்டை நெருங்கிவிட்டது.
இதுகுறித்து Wan, இருவரும் 5 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வருவதாகவும், தனக்காக தன்னுடைய தோழி சுவையான உணவுகளை சமைத்து தருவார் எனவும் நெகிழ்கிறார்.
இந்த சுவாரசியான உண்மை சம்பவத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட, பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.