பெண் வீட்டிற்கு போன வாலிபர்: கிச்சனில் புதைக்கப்பட்ட கொடூரம்
ஒரு பெண் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது .
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்த்தில் உள்ள கிராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த முர்சலீன் என்ற 19 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபருக்கும் அதே ஊரில் உள்ள ஒரு பெண்ணுக்கும் நட்பு இருந்து வந்துள்ளது .அதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார் .ஊரார் அவர்களின் நட்பை பற்றி தவறாக பேசினாலும் அவர் அதை கண்டுகொள்ளாமல் அங்கு சென்று வந்தார் .
இந்நிலையில் அந்த வாலிபரை கடந்த ஆகஸ்டு 11 முதல் காணவில்லை என்று அவரின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுத்தனர் .
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அவரை தேடி வந்தனர் .அதனால் அவரின் செல்போனை ட்ரேஸ் செய்தனர் .அப்போது அவரின் செல்போன் சிக்னல் மூலம் அவரின் சிம் கார்டை ட்ரேஸ் செய்த போது, ஒரு பெண்ணின் வீட்டை அது காமித்தது அதனால் போலீசார் அந்த பெண்ணின் வீட்டினுள் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அந்த வீட்டின் உள்ள ஒரு சமையல் அறையில் புதிதாக டைல்ஸ் போட்டு பூசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது அந்த காணாமல் போன வாலிபரின் சடலம் அங்கே புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர். பின்னர் அவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .
அந்த வாலிபரின் உடல் அங்கே நாலு நாட்களாக புதைக்கப்பட்டு அதன் மேல் டைல்ஸ் போட்டு மூடப்பட்டுள்ளதையும் அதன் மேலே நின்று வீட்டு வேலைகளை அந்த பெண் பார்த்ததையும் போலீஸ் கண்டு பிடித்தனர் .
இப்போது அவர்கள் குடும்பத்தை விசாரித்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.