முகத்தில் இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் மச்சத்திற்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மச்சம்
மச்சம் என்பது நமது உடம்பில் தோன்றும் நிறமிப் புள்ளியினைக் குறிக்கின்றது. இவை அழகு, ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகின்றது.
நிறமி செல்கள் ஒன்று சேர்ந்து தோலில் ஏற்படும் சிறிய, அடர் நிறப் புள்ளிகள் ஆகும். ஜோதிடத்தில் மச்ச சாஸ்திரம் மூலம் பலன்களும் கணிக்கப்படுகின்றது.
மச்சம் இருக்கும் இடத்தினைப் பொறுத்து ஜோதிடத்தில் நமது அதிர்ஷ்டம், குணங்கள், எதிர்காலம் இவற்றினை கணிக்கலாம். அந்த வகையில் பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் தேடிவரும் யோகத்தினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெண்கள் முகத்தில் மச்சம்
நெற்றிப்பொட்டு பகுதியில் மச்சம் காணப்பட்டால் உயர்பதவியில் இருக்கும் நபர் கணவராக அமைய வாய்ப்புள்ளதுடன், செல்வம் உயர்ந்து காணப்படும். மேலும் வலதுபக்கம் மச்சம் காணப்பட்டால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்து, எதையும் வெற்றிகரமாக செய்வார்கள்.
பெண்களின் இடது நெற்றியில் மச்சம் காணப்பட்டால் நல்ல குடும்ப பெண்ணாக இருப்பார்கள். இவ்வாறு சிவப்பு நிற மச்சம் உள்ளவர்கள் குடும்பத்திற்கு தேவையான வசதியினையும் செய்து கொடுப்பார்கள். அதுவே கருப்பு நிற மச்சம் காணப்பட்டால் தீய பழக்கம், தவறான நட்பு போன்றவை இருக்குமாம்.

மூக்கின் மீது மச்சம் உள்ளவர்கள் எடுத்த காரியத்தினை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அதுவே நுனியில் மச்சம் இருந்தால் கணவர் பணக்காரராக அமைவார்களாம்.
உதட்டின் மேல் மச்சம் காணப்பட்டால், அதிர்ஷ்டம், வாழ்க்கை, படிப்பு என உயர்ந்து காணப்படுவார்கள்.
அதுவே உதட்டிற்கும், மூக்குக்கும் இடையே காணப்பட்டால் உயர்ந்த எண்ணம் கொண்டவர்களாவும், அமைதியான மனநிலையில் உள்ளவராகவும் இருப்பார்கள்.
இடது கன்னத்தில் மச்சம் காணப்படுபவர்கள், மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வசீகரத்தினைக் கொண்டிருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் காணப்பட்டால், வாழ்க்கையில் நல்லது மற்றும் கெட்டது கலந்து வரும்.
வலது புற கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் முதல் குழந்தை ஆண்குழந்தையாக பெற்றெடுப்பதுடன், வீட்டில் செல்வாக்கும் நிரம்பி வழியுமாம்.

தலைக்கு மேல் மச்சம் காணப்பட்டால், மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் குணம் உடையவராகவும், கெட்ட குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
வலதுபக்கம் காது மற்றும் கண்ணிற்கு இடையே மச்சம் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுவே இடது பக்கம் காணப்பட்டால் ஏழ்மையான பெண்ணாக இருப்பார்கள்.
வலதுபுற தாடையில் காணப்பட்டால் நெருங்கி யாருடனும் பழகாமல் இருப்பார்கள். இடது தாடையில் காணப்பட்டால் அன்பானவராகவும், அழகானவராகவும் இருப்பார்கள்.
கண்களில் மச்சம் காணப்பட்டால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வெற்றியினை சந்திப்பார்கள். அதுவே காதில் இருந்தால் அதிகம் செல்வாக்கு கொண்டவராகவும் இருப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |