தந்தை சடலத்தின் முன் காதலிக்கு தாலி கட்டிய மகன்! நெகிழ்ச்சி சம்பவம்
பொதுவாகவே எல்லாப் பெற்றோர்களுக்கும் தன் பிள்ளைகளின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.
அப்படி எல்லாம் பார்த்து பார்த்து திருமணம் செய்யும் வேளையில் தாயோ தந்தையோ இறந்து விட்டால் அந்த வலி மிகவும் பெரியதாகவே இருக்கும்.
அப்படியான சம்பவம் ஒன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. இது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
தந்தையின் உடல் முன் திருமணம்
இந்தியாவில், கள்ளக்குறிச்சியில் ராஜேந்திரன் அய்யம்மாள் என்ற தம்பதிகளின் புதல்வர் தான் பிரவீன் இவரின் உறவினர் ஒருவரான சண்முகநாதன்- சுபாஷினி என்ற தம்பதியினரின் மகள் சொர்ணமால்யாவிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் செய்து திருமண திகதியையும் குறித்து விட்டார்கள்.
வரும் 27ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்த வேலையில் மணமகனின் தந்தை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனின் தந்தை இறந்தது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தனது திருமணத்தை பார்க்க தந்தை இல்லையே என்று செய்வதறியாமல் தவித்த மணமகன் திடீரென சோதித்து, தனது தந்தையின் உடல் உன் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார்.
திருமணத்தில் தாய் தந்தை என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அவை எல்லாவற்றையும் செய்து எல்லோர் முன்னிலும் மணமகளுக்கு தாலி கட்டினார். திருமணம் முடிந்த பிறகு உயிரிந்த ராஜேந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று விட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் சில நிமிடம் பலரை கண்கலங்க வைத்து விட்டது.