கிருஷ்ண சிலையை திருமணம் செய்துகொண்ட பெண் - காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் பிங்கி (28) என்ற பெண் கிருஷ்ண சிலையை தாலி கட்டி முறைப்படி கணவனாக திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ண சிலை திருமணம்
மனிர்கள் வழக்கத்திற்கு மாறாக எப்போது எப்படி மாறுவார்கள் என சொல்ல முடியாது. சில மனிதர்கள் அவ்வப்போது விநோதமான செயல்களை செய்வதை நாம் பார்த்திருப்போம்.
பொதுவாக இந்த வினோதம் எல்லாம் திருணங்களில் தான் இடம்பெறும். ஆன்லைனில் திருமணம், பொம்மையுடன் திருமணம், தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் திருமணம், தன்னைத்தானே திருமணம் என உலகம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் தற்போது நடந்திருக்கும் இந்த செய்தி எலகம் முழுவதும் ஒரு பேசு பொருளாக மாறி உள்ளது.
அந்தவகையில், உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவரின் சிலையையே திருமணம் செய்து கொண்டுள்ளார் பிங்கி என்ற (28) வயதுடைய பெண்.
அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றபோது சிலை மீது தங்க மோதிரம் விழுந்ததாகவும், காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்குப் பூஜை செய்தவுடன் குணமானதாகவும் அவர் கூறுகிறார்.

இதை “கிருஷ்ணர் தன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறார்” என்ற அறிகுறியாக நம்பிய அவள், மனிதரை திருமணம் செய்யாமல், கிருஷ்ணர் சிலையையே திருமணம் செய்துள்ளார். தற்போது இது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |