திடீரென கணவனுடன் விவகாரத்து.. அடுத்த கல்யாணம் தந்தையுடனா? அதிர்ந்துபோன முன்னாள் கணவர்!
வளர்ப்பு மகனை திருமணம் செய்த பெண், விவாகரத்து செய்துவிட்டு தந்தையையே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த எரிகா குயிகிள் 31(Erica Quiggle) இவர் 16 வயதில் ஜெப்(Jeff) என்பவரை சந்தித்துள்ளார்.
அப்போது, அவருக்கு வயது 60. இதையடுத்து, ஜெப்பின் வளர்ப்பு மகனான ஜஸ்டின்(Justin) என்பவர் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார்.
மகிழ்ச்சியாக இவர்களின் திருமண வாழ்வு சென்றுகொண்டிருந்த நிலையில், சிறிது வருடத்தில் கணவர் மீது இருந்த காதல் முடிவுக்கு வந்துள்ளது.
இதனால், விவகாரத்து செய்யும் முடிக்கு வந்த எரிகா அதற்கான முயற்சியில் இறங்கி விவாகரத்தையும் பெற்றார். இதன்பின்னர், அடுத்த திருமணத்திற்கு தயாரான எரிகா, யாரை திருமணம் செய்யப்போகிறார் என முன்னாள் கணவர் அவரை கண்டு அதிர்ந்துபோனார்.
அவர் வேறு யாரும் இல்லை.. ஜஸ்டினின் வளர்ப்பு தந்தையான ஜெப் தான். இவர்களின் விவாகரத்துக்கு ஜெப்பிற்கும், எரிகாவுக்கும் ஏற்பட்ட காதல் தான் காரணமாம்.
இதன்பின்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதுகுறித்து எரிகா தெரிவிக்கையில், எல்லாவற்றையும் மீறி எங்கள் உறவு சரியாக இருந்தது. எந்த ஒரு வெறுப்பு எங்களுக்குள் இல்லை.
என் கணவருக்கும் எனக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நாங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது முன்னாள் கணவர் ஐஸ்டினும் அதை புரிந்துகொண்டார்.
என் கணவர் ஜஸ்டினுடன் மகனை பற்றி பகிர்ந்துகொள்கிறார். சில விஷயங்களை உணர்வது கடினம். எங்கள் காதலும் அதே போன்று தான்.
ஆனால் இன்னொருவர் எங்கள் மீது கேள்வி எழுப்பும் அளவுக்கு எங்கள் காதல் இருக்காது என எரிகா தெரிவித்துள்ளார். எரிகாவுக்கும் அவரது கணவரான ஜெப்க்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.