இன்ஸ்டாகிராமில் நடந்த மோசடி... 2 லட்சத்தை இழந்த பெண்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் உடுப்பியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் மோசடியால் 2 லட்சும் ரூபாயை இழந்துள்ளது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மோசடி
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஆன்லைன் வேலை சம்மந்தமான மோசடியில் சுமார் 1.94 லட்சம் ரூபாயை இழந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அர்ச்சனா என்ற இந்த பெண் பகுதி நேர வேலைக்காக ஆன்லைனில் தேடிய போது இன்ஸ்டாகிராம் இணைப்பு ஒன்றினை க்ளிக் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வாட்ஸ் அப் மூலம் சில குறுஞ்செய்திகள் வர தொடங்கியுள்ளது. அதில் சிறந்த பகுதி நேர வேலை வாய்ப்புக்கான "Amazon Freshers Job in India" மூலம் வேலை செய்து அதிக பணத்தை ஈட்டலாம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அமேசான் தளத்தில் முதலீடு செய்தால் பாதிப்பு இல்லை என்று நினைத்த அவர், அங்கு கொடுக்கப்பட்ட யுபிஐ ஐடிக்கு வெறும் ஆறு நாட்களில் சுமார் 1.94 லட்சத்தினை போட்டு ஏமாந்துள்ளார்.
அவர் அனுப்பிய பணத்திற்கு எந்தவொரு ரசீதும் கிடைக்காத நிலையில், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறித்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |