18 லட்சம் பணத்தை நாசம் செய்த கரையான்.. பேங்க் லாக்கர் பயன்படுத்துபவர்களே உஷார்
வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட ரூ.18 லட்சம் பணம் கரையான் தின்று நாசம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை நாசம் செய்த கரையான்
உத்திர பிரதேசத்தில் மொராதாபாத்தில் வசிக்கும் பெண் ஒருவர் மகளின் திருமணத்திற்கு வங்கியில் ரூ.18 லட்சத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளார்.
இவர் வைத்திருந்த பணத்தை கரையான்கள் இரையாக்கியதால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மொராதாபாத்தில் பாங்க் ஆஃப் பரோடாவின் ஆஷியானா கிளையில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் லாக்கரில் குறித்த பணத்தை வைத்துள்ளார். தற்போது அப்பணம் தேவைப்பட்டதால், வங்கிக்கு சென்று எடுக்க முயன்ற நிலையில், கரையான்கள் மொத்த பணத்தையும் வேட்டையாடியுள்ளதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
வங்கி மேலாளர் லாக்கரையில் சேதமடையும் பொருட்களை வைத்தால் நாங்கள் பொருப்பல்ல... வைக்கும் முன்பு அதற்கான முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வங்கி லாக்கரில் நகை மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்களை வைத்திருப்பதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் பணத்தை வைத்தால் இவ்வாறான ஆபத்தை சந்திக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |