இளைஞருக்கு முத்தம் கொடுத்த பெண்: 6 மாத சிறைத்தண்டனை
சூடானில் வாலிபர் ஒருவருக்கு முத்தமிட்ட குற்றத்திற்காக பெண்ணாருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய காலத்தில் முத்தம் ஒவ்வொருவரின் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுபட்டுள்ளது.
அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது.
கடுமையான சட்டம்
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது அனைவரும் அறிந்தததே.
இஸ்லாமிய நாடான அங்கு திருமணம், உறவு சார்ந்த ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில் மிகவும் கடுமையான சட்ட விதிகள், தண்டனை வழங்கப்படும்.
இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் 20 வயதான பெண்ணொருவருக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகியுள்ளது. குறித்தப்பெண் விவாகரத்திற்கு பின் வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகியுள்ளார்.
அந்த ஆணுடன் நெருக்கமாக முத்தமிட்டவேளையில் அப்பெண்ணின் உறவினர் ஒருவர் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். மேலும், அப்பெண் முத்தமிட்ட காதலனை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் அந்நாட்டில் உள்ள பொலிஸ் மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
திருமணமான பெண் வேறு ஒரு நபருடன் பழகியதால் அப்பெண்ணை கல்லால் தான் அடித்து மரண தண்டனை கொடுக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சர்வதேச ரீதியில் பல கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் பெண்ணிடம் மறுவிசாரணை செய்து அப்பெண் இளவயதுடையவர் என்பதால் நாட்டின் சட்ட திட்டங்கள் முறையாக தெரியவில்லை என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீதிபதிகள் அப்பெண்ணுக்கு மரணதண்டணையை தள்ளுபடி செய்து 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.