காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த குடும்பம்: உயிரிழந்த 3 குழந்தைகள்! உயிருக்கு போராடும் கணவர்
இரண்டாவது காதலனுடன் வாழ்வதற்கு கணவர் மற்றும் குழந்தைகள் இடையூறாக இருந்தால் ஜுஸில் விஷம் வைத்து மனைவி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் க்யூனா பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண், தனது கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மாம்பழ ஜுஸில் விஷம் கலந்து கொடுத்ததால், 7,8,9 வயதிலான மூன்று குழந்தைகளும் உயிரிழந்து விட்ட நிலையில், கணவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றார்.
இதையடுத்து காலாவதியான ஜூஸை அருந்தியதால் அவர்கள் இறந்ததாக பொலிசில் இளம்பெண் கூறியுள்ளார். ஆனால் பெலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை மீண்டும் அழைத்து துருவி துருவி விசாரித்ததில், வேறொரு ஆணுடன் தனக்கு கள்ள உறவு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவருடன் உல்லாசமாக இருப்பதற்கு கணவனும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால், காதலனின் ஆலோசனைப்படி நான்கு பேருக்கும் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
இதையடுத்து பொலிசார் குறித்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.