அதிசயம்! 35000 அடி உயரத்தில் நடுவானில் பிறந்த குழந்தை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது குழந்தை பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
மஸ்கட்டில் இருந்து மும்பையை நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது.
விமானத்தில் தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்.
35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
துரிதமாக செயல்பட்ட Cabin Crew, அப்பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யத் தொடங்கினர்.
பயணிகளில் ஒருவர் மருத்துவதாதியாக இருக்கவே, பாதுகாப்பான முறையில் குழந்தையை பிரசவித்தார்.
தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், இதுஒரு அதிசய நிகழ்வு என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது அசாதாரணமானது எனவும், காக்பிட், கேபின் ஊழியர்கள், விமான பணிப்பெண்கள், ஊழியர்கள் என அனைவரின் குழுச் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளது விமான நிறுவனம்.
இச்சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
