ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன்! பிரித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்
ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணிற்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற இளம் பெண் ஆன்லைன் மூலம் சிக்கன் உணவு ஆர்டர் செய்தார்.
குறித்த உணவை தனது கையில் பெற்றுக் கொண்ட பின்பு பார்சலை பிரித்து பார்த்துள்ளார். உள்ளே கடினமான பொருள் ஒன்று இருந்துள்ளது.
சிக்கன் துண்டாக என்று நினைத்தவருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஆம் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கூடிய கத்தி ஒன்று இருந்துள்ளது.
இதனை அவதானித்த பெண் பேரதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காணொளியினை அவதானித்த பலரும், ஆர்டர் டெலிவரி செய்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |