Viral Video: ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண்... ஹீரோவாக மாறிய இளைஞரின் தில்லான காட்சி
பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்குவதற்கு முற்பட்ட நிலையில் தவறி விழும் தருணத்தில் நபர் ஒருவர் ஹீரோவாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.
ஓடும் ரயிலிலிருந்து இறங்கிய பெண்
இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஓடும் ரயில், பேருந்து இவற்றில் ஏறி இறங்குவதை சாதாரணமாக செய்து வருகின்றனர்.
ஆனால் இவை ஆபத்தான செயல் ஆகும். பின்விளைவுகளை அறிந்தும் இவ்வாறு நடந்து கொள்ளும் பல இளைஞர்களை நாம் அவதானித்து வருகின்றோம்.
இங்கு பெண் ஒருவர் கிளம்பி செல்லும் ரயிலிலிருந்து இறங்குவதற்கு முயன்றுள்ளார். அவர் கையை விடாமல் ரயிலை பிடித்துக் கொண்டிருந்ததால், ரயில் செல்லும் திசையை நோக்கி இழுத்து செல்லப்பட்டார்.
பின்பு அருகில் சென்று கொண்டிருந்த நபர் சட்டென அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். குறித்த நபர் சாதுர்யமாக செயல்பட்டதால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஆகவே இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் யாரும் ஓடும் பேருந்திலோ, ரயிலிலோ ஏறி இறங்குவதை தவிர்ப்பது உயிருக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும்.
A man never works for gratitude. He considers every task his responsibility and once that responsibility is fulfilled he moves on to take up the next one.#MenAreAwesome #MenWillBeMen pic.twitter.com/UQay3D2oh0
— Sandeep VS State (@imra_mra) August 22, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
