ஒரே நேரத்தில் 2 வகையான கொரோனா பாதிக்கப்பட்ட பெண்- உயிரிழந்த சோகம்!
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சீனாவிம் பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.9 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.4 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, பெல்ஜியத்தில் 90 வயது பெண்மணி ஒரே நேரத்தில் இரண்டு வகை மரபணு மாற்ற வைரசுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மரணமடைந்த பெண்மணி தடுப்பூசி போடாதவர் என்றும் தொற்று உறுதியான அன்றே அவர் கொரொனாவுக்கு பலியாகி விட்டதாகவும் பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண்மணியை பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா வைரசும், தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட பீட்டா வைரசும் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.