பெண் கொடுத்த புகார்... அதிர்ச்சியடைந்த பொலிசார்! வீட்டிற்கு வந்ததும் அம்பலமாகிய உண்மை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்மநபர் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரது பிறப்புறுப்பை பெண் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள உமரிஹா என்ற பகுதியில் கணவர் வெளியூர் சென்ற நிலையில் தனது 13 வயது மகனுடன் 45 வயது பெண் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட மர்மநபர் ஒருவர் இரவு 11 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். முதலில் அவன் திருடன் என நினைத்த அந்த பெண், தனது மகனை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி, உதவிக்கு அக்கம் பக்கத்தினரை கூட்டிவருமாறு அனுப்பியுள்ளார்.
ஆனால் உள்ளே வந்த மர்ம நபர் பெண்ணை பலாத்காரம் செய்யமுயன்ற போது, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அருவாளை எடுத்து நபரின் பிறப்புறுப்பினை துண்டாக வெட்டிவிட்டு, உடனே காவல்நிலையத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளார்.
பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், வீட்டிற்கு வந்து மயங்கிகிடந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.