ஒரே ஒரு சாண்ட்விச் சாப்பிட்டதால் இளம்பெண் உயிருக்கு போராடும் அவலநிலை! நடந்தது என்ன?
சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண் ஒருவருக்கு குளிப்பதில், சாப்பிடுவது என அனைத்திற்கு அலர்ஜி ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனில் வசிக்கும் 26 வயது பெண்ணான மியா லின்ச்பரியின் (Mia Lainchbury) என்ற நர்சு இளம்பெண் சமீபத்தில், சாண்ட்விச் ஒன்றை சாப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் சிரமாகியுள்ளது. வெந்நீரில் குளித்தாலும் அவளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதன் பின்னர் ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு, ஃபீடிங் ட்யூப் மூலம் உணவுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், மியாவுக்கு சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. இதுமட்டுமின்றி பல நோய்களுடனும் போராடி வருகிறார். அவருக்கு ஏற்பட்ட குடல் பிரச்சனையும் ஒரு பகுதி டெலஸ்கோப்பிங் செயல்பாட்டின் மூலம் இயக்கப்படுகிறது.
அவர் மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்னும் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
