உலகில் விற்பனையில் அசத்தும் எலெக்ட்ரிக் கார்கள்... அப்படி என்ன இதுல ஸ்பெஷல் தெரியுமா?
பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை அதிகரிப்பால், மக்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகமாக ஸ்கூட்டர் விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் நேரத்தில், எலெக்ட்ரிக் கார்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
உலக நாடுகளில் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களில் மக்கள் விரும்பும் கார்களான டெஸ்லா மாடல் இடம்பெற்றுள்ளது.
டெஸ்லா 3 (Tesla Model 3)
உலகளவில் அதிக வரவேற்பை பெற்ற காரில் டெஸ்லா மாடல் 3 இடம்பிடித்துள்ளது. இந்த கார் இந்தியாவுக்கு விற்பனைக்கு கிடைக்க வில்லை என்றாலும், மற்ற நாடுகளில் கிடைக்கிறது. விரைவில் இந்தியாவுக்கும் கிடைக்க அந்நிறுவன பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த கார் ஆனது 568 கி. மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம். மேலும் இதில் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், 15 நிமிடம் சார்ஜ் செய்தாலே 175 கிலோ மீட்டர் வரை செல்லும் திறனுடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

உலிங் ஹாங் குவாங் மினி இவி (wuling hong guang mini ev)
இந்த உலிங் ஹாங் ரக கார் ஆனது ஒரு சிறிய எலெக்ட்ரிக் வகையான கார் ஆகும்,. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே மணிக்கு 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியதாகும். சீனாவில் தயாரிக்கப்படும் இந்த காரனது, சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்துவருகின்றனர்.

டெஸ்லா மாடல் ஓய் (Tesala model y)
டெஸ்லாவில் மின்சார கார்களில் மாடல் 3 அடுத்தப்படியாக இந்த ஓய் மாடல் விற்பனையில் கலக்குகிறது. இந்த கார் ஆனது 11 யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் சிறப்பு அம்சமாக மணிக்கு 455 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 (volkswagen ID 3)
இந்த போக்ஸ்வேகன் ரக காரில் ஆண்டிற்கு மட்டுமே 54, 495 யூனிட் என்ற வீதத்தில் விற்பனையாகி வருகிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே 6 யூனிட்கள் இந்த கார் விற்பனையில் அசத்தி வருகிறது. மிக ஸ்டைலிஷாக இந்த கார் விற்பனையில் அசத்தி வருகிறது.

ஹூண்டாய் கோனோ (Hyundai Kona)
ஹுண்டாய் ரக கார் என்றால் பலருக்கு ஒரு விருப்பமான கார் ஆகும்,. அதிலும் மின்சார காரில் எந்த மின்சார காரும் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே 6 யூனிட் என்ற வீதத்தில் இக்கார் விற்பனைக்கு வருகிறது.

ஆடி இட்ரான் (Audi e-Tron)
இந்த ஆடி கார் ஆனது ஓர் சொகுசு காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு விதமான மாடல்களில் இந்தியாவுக்கும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்டிற்கும் மட்டுமே இந்த கார் 47,324 யூனிட் என்ற வீதத்திலும், ஒரு மணி நேரத்திற்கு நான்கு யூனிட்டுகள் என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகி வருகின்றது.
