தக்காளியே இல்லாமல் கார சட்னி... அட்டகாசமான சுவையில் எப்படி செய்யலாம்?
தக்காளியே இல்லாமல் மதுரை ஸ்டைல் காரசட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
மிளகாய் வத்தல் - 6
காஷ்மீர் மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 10 பல்
மல்லி இலை - சிறிதளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்பு பெருங்காய துண்டு மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

தொடர்ந்து கறிவேப்பிலை, பூண்டு, மல்லி இலை இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியாக வதக்கிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கார சட்னி தயார். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |