வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்! துளியும் மேக்கப் இல்லாமல் நடிகை சினேகா
நடிகை சினேகா தனது தந்தையின் பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.
பின்பு இரண்டு குழந்தைகளுக்கு தாயான சினேகா, அவ்வப்போது வீட்டு விசேஷங்களை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றார்.
தற்போது சில ரிவி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
தந்தையின் பிறந்தநாள்.
நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த பிறந்தநாளை அவர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாட சினேகா முடிவு செய்தார்.
இதனையடுத்து சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் குழந்தை காப்பகத்திற்கு தந்தையை அழைத்து சென்று அங்கு அவர் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும் அங்கிருந்த குழந்தைகள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சினேகாவின் இரண்டு குழந்தைகளும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு பாசிட்டிவ் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.