குளிர்காலத்தில் மஞ்சளை அதிகமாக உணவில் சேர்க்க காரணம் என்ன? இதுதான் காரணம்
சமையல் மட்டுமின்றி மருத்துவத்திலும் முக்கிய பங்கை கொண்டுள்ள மஞ்சளை குளிர் காலங்களில் ஏன் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் தூள்
மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.
பொதுவாகவே குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும் அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வரும் நோய்களை எதிர்த்து போராடுவதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்க வேண்டும். எந்த நோயையும் தடுக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று மஞ்சள்
மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. குறிப்பாக அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜன் பண்புகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
குளிர்காலத்தில் உணவில் அதிகமாக மஞ்சள் இடம் பெறுவதை உறுதி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எந்தவித நோயும் குளிர்காலத்தில் அண்ட விடாமல் பாதுகாப்பதுடன், தொண்டைப்புண் பிரச்சினையிலிருந்தும் நிவாரணம் அளிக்கின்றது.