குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா? பலரது கேள்விக்கு பதில் இதோ
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தயிர்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் தயிர் மிகவும் முக்கியமானது ஆகும். பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது.
ஆனால் சிலருக்கு தயிரை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா? அவ்வாறு தயிர் எடுத்துக் கொள்வதால் சளி பிடிக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
மேலும் பலர் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்தும் வருகின்றனர்.

குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதாக இருக்கின்றது. ஆனால் தயிரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் தயிர் இயற்கையாகவே குளிர்ச்சியானது என்பதால், பிரிட்ஜில் வைக்கும் போது மேலும் குளிர்ச்சியாகி, தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆதலால் ப்ரிஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடாமல், ஒரு அரை மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்த பின்பு சாப்பிடவும்.
குளிர் காலத்தில் இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை சளி பிரச்சனை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் காலை மற்றும் மதியம் ஆகிய வேளையில் தயிர் சாப்பிடலாம்.

ஆனால் இத்தருணத்தில் சளி, சைனஸ், இருமல் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
குளிர் காலத்தில் மனித உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதுடன், பசியும் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த தயிர் சாப்பிடலாம். அவை ஜீரணத்திற்கு உதவி செய்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |