ஒரே ஒரு லொட்டரி டிக்கெட்... ரூ. 3200 கோடி பரிசு! அதிர்ஷ்டசாலியை தேடும் நிறுவனம்;
என்னதான் பலரும் லொட்டரி சீட்டை வாங்கினாலும் ஒரு சிலருக்கு தான் அந்த அதிர்ஷ்டத்த்இல் கோடீஸ்வரனாகும் வாய்ப்பு கிடைக்கிறது. சமீபத்தில் கூட, கேரளாவில் ஒருவர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க சென்ற போது, லொட்டரியும் கூட வாங்கிச் சென்ற நிலையில், அன்று மதியமே அவருக்கு சுமார் 12 கோடி ருபாய் பரிசு விழுந்தது.
அந்த வகையில், ஒருவருக்கு விழுந்த பரிசு தொகையை கேட்டால் ஒரு நிமிடம் மயங்கியே போய்விடுவீர்கள். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், லொட்டரி விற்பனை நடைப்பெற்றுள்ளது.
இந்த லொட்டரியை வாங்கிய ஒரே ஒரு நபருக்கு சுமார் 3, 200 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் இதில் வேடிக்கையான ஒரு விஷயம் என்னவென்றால், லொட்டரி விழுந்த நபர் யார் என்பது பற்றிய விவரம் சரி வர தெரியாவில்லை.
அவரை லொட்டரி நிறுவனம் தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. இந்த பரிசை அவர் ஒரே தவணையாகவும் வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் 29 ஆண்டுகள் தவணை முறையிலும் பெற்றுக்கொள்ளலாம் என கலிஃபோர்னியா மாநில லொட்டரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதைப்பற்றி லொட்டரி இயக்குனர் ஜான்சன் தெரிவிக்கையில், யாருக்காவது தான் இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை.
அவர் விருப்பப்படி தனக்கு கிடைத்த பரிசு தொகையை, ஒரே தவணையிலோ அல்லது தவணை முறையில், 29 ஆண்டுகளாகவும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அந்த மச்சக்கார அதிர்ஷ்ட சாலி யார் என லொட்டரி நிறுவனம் தேடி வருகிறது.