பயங்கர எதிர்ப்பார்ப்பை கிளப்பிய ஐபோன் 13... எப்போது வெளியீடு? சூப்பரான அம்சங்கள்!
ஐபோன் நிறுவனம் ஐபோன் 13 வரிசையில் 4 புதிய மாடல் செல்போன்களை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதிலும், இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது.
ஆனால், என்னதான் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பலரும் பயன்படுத்தினாலும் ஐபோன் பயன்பாட்டாளர்களின் மதிப்பு குறையவே இல்லை. இதனிடையே, ஐபோன் நிறுவனத்தின் ஐபோன் 13 வரிசையின் 4 புதிய மாடல் செல்போன்களை அந்நிறுவனம் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.
மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் வெளியாக உள்ள இந்த செல்போன்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 13 வரிசை செல்போன்களில் ஒரு 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே மற்றும் ப்ரோரெஸ் வீடியோ ரெக்கார்டிங் போன்ற கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதிவேக சார்ஜிங் வசதிக்காக பெரிய பேட்டரியுடன் வெளிவரும் ஐபோன் 13, ஐப்பொன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய பெயர்களில் வெளியாக உள்ளது.
மேலும், இந்த புதிய ஐபோன் 13 வரிசை செல்போன்களின் வரவு 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த ஐபோன் ஏற்றுமதியை 30 சதவீதம் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் பொதுவாக புதிய ஐபோன் மாடல்களை செப்டம்பரில் வெளியிடுகிறது. 2020 ஆம் ஆண்டில், பெரும்பாலும் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இது அக்டோபரில் ஐபோன் 12 வரிசையை அறிமுகப்படுத்தியது.