19 வயதில் தங்கச்சி பாப்பா!! வீட்டில் நடந்த விசேஷம்- பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்
பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் இனியா என்ற நேஹா மேனனின், தங்கையின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
19 வயது வித்தியாசம்
பாக்கியலட்சுமி தொடரின் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா மேனன், கேரளாவை பூர்விகமாக கொண்ட நேஹா, சிறு வயது முதலே சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு தன்னுடைய தாய் கர்ப்பமாக இருப்பதாக நேஹா அறிவித்ததும், பல விமர்சனங்கள் எழுந்தன.
எதையும் கண்டுகொள்ளாமல் தக்க பதிலடி கொடுத்தார் நேஹா, குழந்தை பிறந்ததும் தங்கையை கையில் ஏந்தியபடி “ஒரு தாயாகவும், அக்காவாகவும் ஒரே நேரத்தில் உணர்வதாக” குறிப்பிட்டிருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் ”ஷாஹிதி” யின் பிறந்தநாளை மிக கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.
இதில் பாக்கியலட்சுமி புகழ் எழில் கலந்து கொண்டுள்ளார், இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பலரும் ஷாஹிதிக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க- கண்கலங்கியபடி பேசிய பாரதி கண்ணம்மா வெண்பா