தலைவிரிக்கும் சொந்த பகை! ஐஷ்வர்யாவை பிரிவது உறுதி...இளைய சூப்பர் ஸ்டாராகும் தனுஷ்?
தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் கார்டில் “இளைய சூப்பர் ஸ்டார்” என்ற பட்டம் இடம்பெற உள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.
கடந்த 2019ம் ஆண்டு தனுஷ் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது 39வது பிறந்தநாள் வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு, பெரிய விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
விழா மேடையில் சூப்பர் ஸ்டாரின் சினிமா வாரிசாக பார்க்கப்பட்ட தனுஷுக்கு ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். ஆனால் மேடையிலேயே அந்த பட்டத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் தனுஷ்.
என்றாலும் ரசிகர்க்ள் விடவில்லை.

அசுரன் படம் ரிலீஸான போது நெல்லையில் ஒரு திரையரங்கில் “இளைய சூப்பர்ஸ்டார் தனுஷ்” என்று டைட்டில் போட்டு ரசிகர்கள் கொண்டாடுவது வைரலாக, பெரும் சர்ச்சை கிளம்பியது. பிறகு அது ரசிகர்கள் கொண்டாடுவதற்காக திரையிடப்பட்ட பிரத்யேக வீடியோ என்பது தெரியவந்தது.
தற்போது சூப்பர் ஸ்டார் மகளை பிரிந்து தனியாக வாழும் இந்த நேரத்தில், அவர்களை சேர்த்து வைக்க குடும்பம் மற்றும் திரைத்துறை நண்பர்கள் அனைவரும் கடுமையா முயன்று வருகின்றனர்.
ஆனால் தனுஷ் மீண்டும் ஐஷ்வர்யாவுடன் சேர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நேரத்தில் தனது அடுத்த படத்தில், “இளைய சூப்பர் ஸ்டார் - தனுஷ்” என்று டைட்டில் கார்ட் போட தனுஷ் சம்மதம் தெரிவித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் முழுக்க பரபரப்பாக பேசப்படுகிறது.
”இது நடிப்பில் நானும் ரஜினிக்கு நிகரானவந்தான் என்று காட்டுவதற்காகவா, அல்லது ஏதாவது சொந்த பகை காரணமாக வெறுப்பேற்றவா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு பெரும் சர்ச்சை கிளம்பப்போவதும், தனுஷ்-ஐஷ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் இடியாய் இந்த விவகாராம் விழப்போவது உறுதி. ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்கள்
ஏற்கனவே இந்த தகவல் வைரலானதில் ரஜினி ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.