தாமரைக்கு அடித்த அதிர்ஷ்டம்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
கடைசி வரை தப்பித்து விட வேண்டும் என போராடிய அபிநய்க்கு கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்காததால் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்.
இந்த வார இறுதியில் இதன் விளைவு அபிநயை பாதிக்குமா என்பதை ஆவலோடு காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வாரம் ஹவுஸ்மேட்களை நாமினேட் செய்ய சொன்ன பிக் பாஸ் கடைசியில் அவரே கடுப்பாகி ஒட்டுமொத்த 11 பேரையும் நானே நாமினேட் செய்கிறேன் என அனைவரையும் நாமினேட் செய்து விட்டார்.
ஆனால், நாமினேஷனில் இருந்து தப்பிக்க சில பல டாஸ்க்குகளில் வெல்ல வேண்டும் என்கிற வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்.
நம்பர் ஒன் இடத்தை தயங்காமல் பிடித்துக் கொண்ட சிபி இந்த வாரம் காப்பாற்றப்பட்டார்.
இரண்டாவதாக கொடுக்கப்பட்ட பஸ் டாஸ்க்கில் நிரூப் கடைசி வரை பஸ்சில் இருந்து இறங்காமல் விளையாடி இரண்டாவதாக சேவ் ஆனார்.
நேற்று தாமரை காப்பாற்றப்பட்டார். இறுதி வரை அவருடன் அபி போராடினார். அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இந்த வாரம் உள்ளது.
இல்லை என்றால் அபிநய்க்கு பதிலாக அமீர், அக்ஷரா அல்லது வருணை வெளியேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.