நாகப்பாம்பை உயிருடன் பிடித்த வனவிலங்கு ஆர்வலர்! பூஜை செய்து கொடுத்த ஷாக்
நாகர பஞ்சமியை முன்னிட்டு வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் பாம்புக்கு பூஜை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்புக்கு நடந்த பூஜை
உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி அருகே பிசாலகொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஹூலேகல்.
வனவிலங்கு ஆர்வலரான இவர் நேற்று நாகர பஞ்சமியை முன்னிட்டு வனப்பகுதியில் ஒரு நாகபாம்பை பிடித்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
பின்னர் நாகபாம்புக்கு பால் வைத்ததோடு, குறித்த நாகபாம்பை மீண்டும் வனப்பகுதியில் விட்டுள்ளார்.

பூஜை செய்ய காரணம் என்ன?
இதுகுறித்து பிரசாந்த் ஹூலேகல் கூறுகையில், பாம்புகளை பற்றி மக்களிடம் தவறான எண்ணம் உள்ளது.
அதனை போக்கவும், அச்சத்தை போக்கவும் நான் உயிருள்ள பாம்பை பிடித்து சோதனை நடத்தியுள்ளேன்.
பாம்புகளை கொல்லக்கூடாது என்றும் நமக்கும் விவசாயத்துக்கும் துணையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.