தமிழ் பிக்பாஸ் சீசன் 5 முதல் Wildcard என்டரி! யார் அந்த பெண் போட்டியாளர் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது.
லேட்டஸ்ட் தகவலாக பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஹாட் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 வது நாளில், அதாவது அக்டோபர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, முதல் Wildcard என்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாராம்.
பிக்பாஸ் சீசன் 5 ல் முதல் Wildcard என்ட்ரி என்பதால் ரசிகர்கள் இதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முதல் Wildcard என்ட்ரியாக உள்ளே செல்ல போவது வேறு யாரும் இல்லை.
நடிகை ஷாலு ஷம்மு தானாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து, சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியால் அனைத்து ரசிகர்களையும் கட்டி போட்டு வைத்துள்ள ஷாலு ஷம்மு தான் இப்போது பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் செல்ல போகிறாராம்.