கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானை... - பதற வைக்கும் வீடியோ
மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலைப்பாதையில் காரை வழிமறித்த காட்டு யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காரை வழிமறித்த காட்டு யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நீலகிரி, மேட்டுப்பாளையம், கோத்தகிரிக்கு இடையில் ஒற்றை யானை சாலையில் திடீரென வந்ததால், கார் யானையிடம் சிக்கிக்கொண்டது.
இதைப் பார்த்த பஸ்ஸில் வந்தவர்கள் கத்தி கூச்சல் போட்டு அந்த காரில் லைட் போடும்படி சொல்கிறார்கள். சற்று நேரத்தில் யானை அந்த காரை நெருங்கி அடிக்கப் பார்த்தது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக யானையிடமிருந்து காரில் இருந்தவர்கள் காயம் எதுவுமின்றி தப்பிச் சென்றனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
So beautiful sir, all of them are looking healthy n completely relaxed. Two day's back this happened between mettupalayam to kotagiri at Nilgiris an single elephant came on the road n the car had a narrow escape. Fortunately no injury to the elephant as well as people in the car https://t.co/XMKgeIcsMc pic.twitter.com/dZA6iTgLN7
— ncsukumar (@ncsukumar1) March 8, 2023