காட்டுயானை தாக்கியதில் இளைஞர் பலி.... - அதிர்ச்சி வீடியோ வைரல்...!
கிருஷ்ணகிரியில் காட்டு யானை மிதித்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுயானை தாக்கியதில் இளைஞர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள காட்டு கொலை கிராமத்தில் 2 யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அப்போது, சின்னசாமி என்பவர் தென்னந்தோப்பில் 2 யானைகள் முகாமிட்டிருந்தன. அந்த சமயம் ராம்குமார் (27) என்பவர் செல்போனில் அந்த 2 யானைகளை வீடியோ எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது, யானை ராம்குமாரை துரத்திச் சென்று காலால் மிதித்து அவரை கொன்றது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாரூர் அருகே 2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் ஓடுகிறது.
பாரூர் அருகே காட்டு யானை மிதித்து இளைஞர் பலி
— அருண்.த (@arun_ntk_51) March 14, 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள காட்டு கொலை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் 27 இவர் இன்று காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலை அடிவாரத்தில் காலை இயற்கை உபாதைக் கழிக்க சென்ற பொழுது இரண்டு pic.twitter.com/qWRg17oSJj
*யானை தாக்கி ஒருவர் பலி*
— V NEWS TAMIL (@DreamYazh) March 14, 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சம். #vnewstamil #News7Tamil #TamilNews #kirisnagiri pic.twitter.com/wuYDY8vVPo