கழுகு குஞ்சு பொரிக்கும் அற்புத காட்சி! அரிய நிகழ்வை படம்பிடித்தது எப்படி தெரியுமா?
சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், காட்டு கழுகு குஞ்சு பொரிக்கும் வீடியோ அற்புதமான காட்சி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி (RSPB) அபெர்னாதி மையத்தின் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏப்ரல் 8, வெள்ளிக்கிழமை இரவு 7.43 மணிக்கு குஞ்சு பொரிக்கும் நேரலை காட்சிகளைப் பார்த்தனர்.
பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கூடு கட்டும் இடம் பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டது. சமீபத்தில், RSPB ஸ்காட்லாந்து ஏப்ரல் 8 ஆம் தேதி 19.43 மணிக்கு கழுகுகள் முதல் முட்டை இட்டு குஞ்சு பொரித்ததை உறுதிப்படுத்தியது.
இரண்டு கழுகுகளும் பனி மற்றும் புயலில் இருந்து குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் காண கிடைக்காதவை. லோச் கார்டன் நேச்சர் சென்டரில் குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதை பதிவு செய்த கேமரா, கூட்டில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் ஒரு மர கிளையில் மறைத்து வைக்கப்பட்டது.
பர்ஸில் பணம் பலமடங்கு பெருக வேண்டுமா? இந்த மாதிரி வைங்க அதிசயம் நடக்கும்
Shona and Finn, the white-tailed eagle pair nesting in the @CairngormsCo landscape are now proud parents!
— RSPB Scotland (@RSPBScotland) April 9, 2022
Watch the video below for one of the first glimpses of the newborn chick. Or better yet, pop into the Nature Centre at @RSPBLochGarten to see the action live! pic.twitter.com/2As3B0t0uD