Wild Card எண்ட்ரியாக ரச்சிதாவின் கணவர்? மனைவியிடம் எல்லைமீறும் ராபர்ட் மாஸ்டரை ஓட ஓட விரட்டுவாரா?
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷை உள்ளே அனுப்புமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் கிளம்பி கொண்டிருக்கின்றது.
அப்படி இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் நடிகை ரச்சிதாவினை சுற்றி சுற்றி வருகின்றார்.
வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷை களமிறக்குங்கள்
இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் என்பதால் ரச்சிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்து வருகிறார். ராபட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம் தொடர்பாக ரச்சிதாவின் கணவர் தினேஷ் கருத்து வெளியிட்டிருந்தார்.
தினேஷ்,ரக்சிதாவை பிரிந்து இருந்தாலும் ஒரு இடத்தில் கூட அவரை விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார். இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
மிக விரைவில் ரச்சிதாவின் கணவர் தினேஷை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.