உடல் கொழுப்பை சட்டெனக் குறைக்கும் பொடி: எவ்வித செலவும் இல்லாமல் வீட்டிலேயே குறைக்கலாம்
பெரும்பாலானோருக்கு இப்போதுள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்து இருக்காது.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். அப்படியானவர்களுக்கு உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவது தான் இந்த கொள்ளுப் பொடி இதனை வீட்டிலேயே தயாரித்து எப்படி சுவைக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1 கப்
- எள்ளு -1 கப்
- உளுந்தம்பருப்பு -1 கப்
- மிளகாய் வத்தல்
- பூண்டு
- பெருங்காயம்
- உப்பு
- புளி
- கறிவேப்பிலை
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கப் எள்ளை எடுத்து சுத்தம் செய்து கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அதே போல கொள்ளையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பை தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டும் அதன் பின் மிளகாய்யையும் எண்ணெய் ஊற்றி வறுத்து பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பூண்டையும் சேர்த்து இரண்டு கைபிடி கறுவேப்பிலையும் புளியும் சேர்த்து வறுத்த பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்தால் எடையைக் குறைக்கும் கொள்ளுப் பொடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |