வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த மனைவி.. கணவருக்கு இழப்பீடு உத்தரவிட்ட நீதிமன்றம்!
ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் இந்திய மதிப்பில் 70 ஆயிரம் அபராதத்தை அந்த பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வித்தியாசமான வழக்கில் பெண்ணுடன் உறவு கொண்டதற்காக பெண்ணின் கணவருக்கு ரூ.70,000 (1,10,000 யென்) சமமான இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தனது மனைவியுடன் வேறொரு பெண் உறவு கொண்டதாக குற்றம் சாட்டி அந்த கணவர் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது மனைவியும் அந்த பெண்ணும் ஆன்லைனில் பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அந்த ஆணின் மனைவியோடு உறவில் ஈடுப்பட்டதன் மூலம் அவர்கள் திருமண வாழ்க்கையை எந்த விதத்திலும் அவர் அழிக்கவில்லை மேலும் எந்த துரோகத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறினார்.
ஆனால், நீதிமன்றம் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த ஆணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இது துரோகத்தை ஏற்படுத்தும் செயல் அல்ல என்றாலும் அந்த பெண் செய்தது குற்றமே என நீதிமன்றம் கூறியது.