நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்: பிறப்புறுப்பை துண்டித்த மனைவி! பகீர் காரணம்
உத்திர பிரதேசத்தில் மூன்றாவதாக திருமணம் செய்வதாக கூறிய கணவரை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தருணத்தில், மனைவி ஒருவர் மர்ம உறுப்பை அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வகீல் அகமது(57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பெயர் ஹாஜ்ரா.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வகீல் அகமது மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்துள்ளார்.
வகீல் அகமது மூன்றாவது திருமணம் செய்து கொள்வதற்கு ஹாஜ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சம்பவத்தன்று தனது கணவர் வகீல் தூங்கிக்கொண்டிருந்த தருணத்தில் கையில் ஆயுதத்தை எடுத்த மனைவி ஹாஜ்ரா அவரது மர்ம உறுப்பை துண்டித்துள்ளார். வலியில் துடித்த கணவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்தநிலையில் தனது கணவர் இறந்துவிட்டார் என கூறி, ஹாஜ்ரா தனது உறவினர்களின் உதவியுடன் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் வக்கீல் அகமதுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், தனது கணவனின் பிறப்புறுப்பை துண்டித்து கொலை செய்ததை ஹாஜ்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஹாஜ்ராவை பொலிசார் கைது செய்துள்ளனர்.