வீட்டு வேலைகள் செய்யச் சொன்னதால் விவாகரத்து கேட்ட மனைவி!
திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது. அன்பைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாது வேலைகளையும் பகிர்ந்து கொள்வது அவசியம்.
பெரும்பாலும் வீட்டில் பிரச்சினை வருவதற்கு மூல காரணம், வேலைகளை பிரித்து செய்யாததுதான். வீடுகளில் கணவர்மார் வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டைப் பராமரித்தல், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் பெரும்பாலும் மனைவிகளே செய்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் ஆண்கள் வீட்டிலிருக்கும் போதாவது தனக்கு ஏதாவது உதவி செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று மனைவிகள் எண்ணுவது இயல்புதான். கணவர்கள் இந்த நேரம் மறுப்புத் தெரிவிக்கும்போது அங்கே பிரச்சினை எழுகின்றது.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, மனைவியொருவர் தமது கணவர் வீட்டு வேலைகளைச் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனால் தனக்கு விவாகரத்து வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
25 வருடங்களாக தனியாக வீட்டு வேலைகளை செய்த மனவைிக்கு ரூ.1.75 கோடி பணம் கொடுக்குமாறு ஸ்பெயின் நீதிமன்றம் கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது.