குளிக்காமல் இருந்த மனைவி: விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த கணவர்
உத்தரபிரதேசத்தில் மனைவி குளிப்பதில்லை என விவாகரத்து கேட்டு கணவர் சென்ற விவாகரத்து வழக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் இனி தன் மனைவியுடன் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவாகரத்திற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் தன் மனைவில் குளிக்காமல் இருப்பதே பிரச்சினை என்று கூறியுள்ளார்.
இதனால் தன் மனைவியுடன் சேர்ந்த வாழபிடிக்கவில்லை என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி அவருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.