கணவனின் மண்டை உடைத்த மனைவி... ஓவர் பாசத்தால் நேர்ந்த கொடுமை! வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அவற்றில் சில வகையானது வினோதமாகவும், பல வித அழுத்தங்களை சந்திக்கும் நாம் இந்த வீடியோக்களை பார்த்து சற்று ரிலாக்ஸ் ஆகிறோம்.
ஆனால், கணவன் மனைவி இடையேயான ஒரு வீடியோ காட்சி தான் இங்கு பயங்கர ட்ரெண்டாக உள்ளது.
அதாவது, இரவு உணவு சாப்பிடாமல் தூங்கிய கணவர் மீது கோவம் கொண்ட மனைவி அவரை கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறார்.
இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. பின் மண்டை உடைந்து 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இச்சம்பவமானது, ராஜஸ்தானின் பிகானேரில் ரித்மல்சார் கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மனைவியின் பாசம் எல்லை தாண்டியதால், கணவனுக்கு பயங்கரமான விளைவு ஏற்பட்டது.
இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களிடையே பல விமர்சனத்தையே பெற்றுள்ளது.