கர்ப்பமானதை ஐஸ்கிரீம் கொடுத்து கணவருக்கு சர்ஃரைஸ் கொடுத்த மனைவி! 14 மில்லியன் பார்வையாளர்களை வியக்க வைத்த காணொளி!
கர்ப்பமான மகிழ்ச்சியை கணவருக்கு தெரிவிக்க ஐஸ்கீரிம் மூலம் மனைவி வெளிப்படுத்திய தருணம் பல மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
டிக்டாக் வைரலான வீடியோ ஒன்றில், லிசா(Lisa) என்ற பெண் தான் கர்ப்பமான சந்தோஷத்தை கணவர் ஜோஷ் (Josh)-யிடம் தெரிவிக்க ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளார்.
அந்த முயற்ச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடை ஒன்றில், நண்பர்களுடன் சேர்ந்து, ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது, மனைவி கர்ப்பமான சந்தோஷத்தை கணவருக்கு தெரிவிக்க அந்த பெண் கணவரின் ஐஸ்கிரீமில் கர்ப்பமான டெஸ்ட் கருவியை பொருத்தி கொடுத்துள்ளனர்.
அதை எதிர்ப்பாராமல் சாப்பிட்ட கணவன் உள்ளே என்னமோ இருக்கிறது என அறிந்து, அதை எடுத்து பார்க்க, மனைவி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்..
அவரும் சந்தோஷத்தில் மகிழ்ந்துள்ளார். இக்காட்சியினை டிக்டாக் வீடியோ மூலம் பதிவிட 14 மில்லியன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
இப்படி ஒரு யோசனை அவர்கள் வெளிப்படுத்தினாலும், பலரும் உணவில் இப்படி கருவியை வைப்பது ஒரு ஆபத்தான செயல் என கூறி வருகின்றனர்.