மற்றவர்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினரை மற்றவர்கள் எப்போதும் தவறாகத்தான் புரிந்துக்கொள்வார்களாம். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் எப்போதும் மர்மம் நிறைந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். எளிதில் உணச்சிவசப்படக் கூடிய இவர்கள் மற்றவர்களுடன் எந்த விடயத்தையும் எளிதில் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள்.
இந்த குணத்தால் இவர்கள் மற்றவர்களால் பல நேரங்களில் தவறாக புரிந்துக்கொள்ளப்படுகின்றார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் எப்போதும் தாங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என நினைப்பார்கள்.இவர்களின் கருத்தை மறுத்து போசுபவர்களுடன் இவர்கள் இணைந்திருக்க விரும்ப மாட்டார்கள்.
சில சமயங்களில் சமூக விதிமுறைகளுக்கு இணங்காமல் கூட தங்களின் கருத்து தான் சரியானது என இருப்பதால் அதிகமாக சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இவர்களின் மனநிலையை புரிந்துக் கொள்வது சற்று கடினமான விடயம் தான். தங்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுடன் மாத்திரமே இவர்கள் பழக விரும்புவார்கள். இவர்களின் இந்த குணத்தால் பலரும் இவர்களை தவறாக புரிந்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.