பெண்கள் அணியும் Jeans-ல் இதனை கவனித்தது உண்டா? சிறிய பாக்கெட்டுகள் இருப்பது ஏன்?
Jeans உடைகள் இல்லாத வீட்டின் அலமாரிகளை பார்க்க முடியாது, மிகவும் சௌகரியமான உடைகளில் முக்கியமானது Jeans.
ஒரு Jeans-யை பல வருடங்கள் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் ஆண்கள் Jeansலும், பெண்கள் Jeansலும் இருக்கும் இந்த வித்தியாசத்தை நீங்கள் கவனித்தது உண்டா?
ஆண்கள் Jeans-ல் இருக்கும் பாக்கெட்டுகள் பெரியதாகவும், அதுவே பெண்கள் Jeansல் சிறியதாகவும் இருக்கும்.
இது ஏன் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து Emily Keller என்ற ஆடை வடிவமைப்பாளர் கூறுகையில், ஆண்களுக்கென்று தயாராகும் Jeansகள் மொபைல் போன்கள், பர்ஸ்கள், சாவிகள் வைக்கும்படி பெரியதாக வடிவமைக்கப்படும்.
அதுவே பெண்களுக்கு என்று வரும் போது நாணயங்கள் வைக்கும்படியாக சிறியதாகவே இருக்கும்.
இதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது லாபம் தான், சிறிய அளவிலான பாக்கெட்டுகளை வடிவமைக்கும் போது ஆடை நிறுவனங்கள் அதிகளவு லாபத்தை ஈட்டலாம், இதனாலேயே ஒருசில நிறுவனங்கள் பாக்கெட்டுகள் இல்லாமலே Jeansயை வடிவமைக்கின்றன.
இரண்டாவது காரணம், பெண்கள் அணியும் Jeansகள் அவர்களது உடலுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும், பெரிய பாக்கெட்டுகளாக இருந்தால் அவர்களின் உடல் அமைப்பை அது மாற்றிவிடும், அதில் அதிகளவான பொருட்களை வைத்தால் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கலாம், அது அவர்களது Look-யே மாற்றிவிடும்.
