கோடை காலத்தில் அதிகமா பூண்டு சாப்பிடாதீங்க... இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே சமையலில் முக்கியத்துவம் பெறும் பொருட்களுள் பூண்டுக்கென தனி இடம் இருக்கின்றது.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
குளிர்காலத்தில் பூண்டு சாப்பிடுவதால் உடல் வெப்பநிலையை அதிகரித்து குளிர்கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
ஆனால் கோடை காலத்தில் பூண்டை குறைவாக சாப்பிட வேண்டும். பூண்டு உடல் சூட்டை அதிகரிக்கும். அதனால் பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பாதக விளைவுகள்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொதுவாகவே பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் இவ்வாறு செய்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது.
அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும் பூண்டு சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் கருத்துப்படி பூண்டு சாப்பிடுவது வாயு-அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் கோடைக்காலத்தில் அதிகமாக பூண்டு சேர்த்துக் கொள்வது செறிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் எனவே கோடையில் பூண்டை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |