கோயில் வாசலில் காலணிகளை கழற்றுவது ஏன்? இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா!
பொதுவாகவே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து கடவுளை வழிபடுபட வேண்டும் என்ற வழக்கத்தை தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது தூய்மையைப் பேணுவதற்கும், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமாக மாத்திரமே தோன்றும்.

ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் ஆழமானது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீக முக்கியத்துவமும் அறிவியல் பின்னணியும்
பொதுவாக இது கோயிலின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழக்கம் என்று கருதப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான ஆன்மீக அர்த்தங்கள் உள்ளன. இறைவனை தரிசிப்பதற்கு முன், ஒரு பக்தர் மனதிலும் உடலிலும் தூய்மையுடனும், பணிவுடனும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த வழக்கம் உருவானது.

இந்து மத நம்பிக்கைகளின்படி, கோயிலுக்கு வெளியே காலணிகளை விட்டுச் செல்வது என்பது வெளிப்புற பொருட்களை மட்டுமல்ல, அகங்காரம், கவலைகள் மற்றும் உலகியல் பற்றுகளையும் விட்டு விட்டு இறைவனை அணுகுவதைக் குறிக்கிறது.
இது பக்தரின் பணிவையும், புனிதமான இடத்தின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான இணைப்பு காலணிகள் பக்தருக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதாக ஆன்மீக ரீதியாகக் கருதப்படுகிறது.

எனவே, கோயிலுக்குள் செல்லும் முன் அவற்றை கழற்றுவது, மனதை ஒருமுகப்படுத்தி இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபட உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது.
வெறும் கால்களுடன் கோயிலுக்குள் நடப்பது பூமியின் ஆற்றலுடன் மனிதனை இணைக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. யோக மரபுகளில் குறிப்பிடப்படும் ‘மூலாதாரச் சக்கரம்’ நிலைத்தன்மை மற்றும் சமநிலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
வெறும் கால்களுடன் நடப்பதால் மன அமைதியும், ஆன்மீக உறுதியும் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர். தூய்மையின் அடையாளம் பழங்காலத்தில் காலணிகள் பெரும்பாலும் தோலால் தயாரிக்கப்பட்டன.
தோல் இறந்த விலங்குகளிலிருந்து பெறப்படுவதால், அது புனிதமான இடங்களில் பயன்படுத்தத் தகாதது என சில இந்து மரபுகளில் கருதப்பட்டது. அதனால் கோயிலுக்குள் காலணிகளை அணிந்து செல்வது தவிர்க்கப்பட்டது. இது உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத அகிம்சை கொள்கைக்கு மதிப்பளிக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நன்மைகள்
பெரும்பாலான கோயில்களின் தரைப்பகுதி கிரானைட், சலவைக்கல் அல்லது மணற்கல் போன்ற கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். இவை உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, வெறும் காலுடன் நடப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
மேலும், கோயில்களில் மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்ற இயற்கையான பொருட்களால் தூய்மை செய்யப்படும் சூழல் பக்தர்களுக்கு மன அமைதியையும் நேர்மறையான உணர்வையும் தருகிறது.
எனவே, கோயிலுக்குள் நுழைவதற்கு முன் காலணிகளை கழற்றுவது என்பது வெறும் ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது தூய்மை, பணிவு, ஆன்மீகம் மற்றும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு அர்த்தமுள்ள மரபாகவே இன்றுவரையில் பின்பற்றப்ட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |