Nipah Virus symptoms: நிபா வைரஸ் எப்படி பரவுகின்றது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலச்சியப்படுத்தாதீங்க...
தற்காலத்தில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வண்ணம் இருக்கின்றது.
இருப்பினும் இது குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு அற்ற நிலையே நிலவுகின்றது. ஆனால் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற இது குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் (NiV) எனப்படுவது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும்.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவக்கூடிதே ஜூனோட்டிக் வைரஸ் வகையாகும்.
மேலும் அசுத்தமான உணவு அல்லது நேரடியாக மக்களிடையே பரவும் வாய்ப்பும் காணப்டுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில், இது அறிகுறியற்ற (சப்ளினிகல்) தொற்று முதல் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடியது.
நிபா வைரஸ் என்பது ஒரு ஆர்.என்.ஏ வகையை சார்ந்த வைரஸாகும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ். குறிப்பாக, வெளவால் மற்றும் பன்றியிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது.
இது மனிதர்களை தாக்கி அவர்களின் நுரையீரலைப் பாதிக்கும் தன்மையை கொண்டிருக்கின்றது. அதன் பின்னர் அந்த நபரில் இருந்து அது மற்றொரு மனிதருக்கு பரவுகிறது. இது மனிதர்களை இரண்டு விதமாக தாக்குகின்றது.
ஒன்று மூளைப்பகுதியை தாக்குகிறது. மற்றொன்று நுரையீரல் மற்றும் இதயத்தை தாக்குகிறது. மூளை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு உறை போல் படர்ந்திருக்கும் மெனிஞ்சஸ் எனும் பகுதியில் தாக்கம் செலுத்தி இந்த பகுதியை அழிக்கின்றது.
முக்கிய அறிகுறிகள்
நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்த வைரஸ் நுரையீரல் மற்றும் இதயத்தை தாக்குவதன் விளைவாக தலைவலி, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மூச்சுத் திணறல், காய்ச்சல், ஃபிட்ஸ், இருமல் போன்ற அறிகுறிகளை தான் முதலில் வெளிப்படுத்துகின்றது.
ஒரு சிலருக்கு தலைசுற்றல், அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இந்த அறிகுறிகள் இருப்போர் 4 முதல் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக இதற்கான மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுருத்துகின்றனர்.
இந்த அறிகுறிகள் தீவிரமடையும் பட்சத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டியதிருக்கும்.
ஏனைய கொரோனா வைரஸ், இன்ஃபுளுயென்ஸா வைரஸ் போன்ற பாதிப்பின்போது வழங்கப்பட்ட முதன்மையான நிவாரண சிகிச்சைகள் தான் இத்தகைய வைரஸ் பாதிப்புக்கும் கொடுக்கப்படுகின்றது.
நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை எனவும் அந்த நிறுவனம் தங்களது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வீடுகளில் விலங்குகளை அல்லது செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள் இருந்தால், அதனுடன் நெருக்கமான தொடர்பை தவிர்ப்பது முக்கியமாகும்.
அல்லது முழு பாதுகாப்பு உடை அணிந்து அதனை பராமரிக்க வேண்டும். பெரும்பாலும் இத்தகைய வைரஸ், குளிர் காலத்தில் அதிகமாக பரவுவதால் இதன்போது விலங்குகளிடமிருந்தும், செல்லப் பிராணிகளிடமிருந்தும் இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க முடியும்.
உடல் நிலை சரியில்லாத மிருகங்களை தொடுவதையோ அதனுடன் தொடர்பில் இருப்பதையோ முற்றும் முழுதாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக பன்றிகள் மற்றும் வௌவால்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விலங்கு உணவுகள் நிபா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மிருகங்களினால் செய்யப்பட்ட உணவுகளாகவும் இருக்கலாம். இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக பன்றி இறைச்சி, பேரிச்சம்பழத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கள்ளு உள்ளிட்டவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். நிபா வைரஸ் தொற்று அறியப்பட்ட இடத்திற்கு செல்வதை தவிர்த்துக்ககொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் என எதை சாப்பிடுவதற்கு முன்பும் அவற்றை சுத்தமாக கழுவிய பின்னர் சாப்பிட வேண்டும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |