பாம்புகள் ஏன் அதனுடைய தோலை அடிக்கடி உரிக்கின்றன தெரியுமா?
அமேசானின் அடர்ந்த மழைக்காடுகள் முதல் சஹாராவின் வறண்ட பாலைவனங்கள் வரை வாழும் அனைத்து பாம்புகளும் தங்கள் தோலை உரித்துக்கொள்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்புகள் ஏன் தோல் உரிக்கின்றன
பொதுவாக பாம்புகள் விஷமுள்ள ஒரு கொடிய மிருகமாக பார்க்கப்படுகின்றன. ஆனால் பாம்புகள் தங்கள் வளரும் உடல்களுக்கு இடமளிக்க அவ்வப்போது தங்கள் தோலின் முழு வெளிப்புற அடுக்குகளையும் உதிர்க்க வேண்டும்.
இப்படி செய்தால் தான் அவைகள் ஆரோக்கியமாக இருக்க அது வழிவகுக்கும். தங்களின் தோலை அவை உரிக்கும் போது தங்கள் உடலை சுழலவும் முறுக்கவும் தொடங்கும்.
இதன் மூலம் படிப்படியாக பழைய தோலை உரிக்கிறது. இதன் விளைவாக, பாம்பின் முன்னாள் வெளிப்புற தோல் அப்படியே அகற்றப்படும்.
தோலை உதிர்ப்பதில் இருக்கும் நன்மைகள்
புதிய தோல் வளர்ச்சிக்கு உதவகிறது. பழைய தோலின் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும். பாம்புகள் ஏதேனும் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து குணமாகும்.புதிய தோல் பாம்பிற்கு ஒரு பிரகாசத்தை கொடுக்கும்.
வெவ்வேறு வகையான பாம்புகள் வெவ்வேறு எண்ணிக்கைகளில் தோலை உதிர்க்கின்றன. மிக வேகமாக வளரும் இளம் பாம்புகள், சில வாரங்களுக்கு ஒருமுறை உதிர்க்கக்கூடும்.
அதே சமயம் வயதான பாம்புகள் வருடத்திற்கு சில முறை மட்டுமே உதிர்க்கின்றன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் உதிர்தல் சுழற்சியை பாதிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |