தவறியும் படுக்கையில் அமர்ந்து சாப்பிடாதீங்க... இந்த பிரச்சினைகள் தேடி வருமாம்
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் மக்கள் தொன்று தெட்டு பின்பற்றும் ஒரு நடைமுறையாக பார்க்படுகின்றது.
பல நூற்றாண்டுகளாக வழிகாட்டி வரும் வாஸ்து சாஸ்திரம், அழகியல் ரீதியாக மட்டுமல்ல வாழ்வில் வெற்றி, புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஈர்க்கவும் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து வருகின்றது.
அந்த வகையில் படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதால் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது தொடர்பில் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
படுக்கையில் அமர்ந்து சாப்பிட கூடாதது ஏன்?
பொதுவாக சில வீடுகளில் அடிக்கடி பணப்பிரச்சினைகள், ஆரோக்கிய குறைப்பாடுகள் வந்து கொண்டே இருக்கும்.
சில வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் காசு மிச்சமில்லாமல் போகலாம்? அதற்கு என்ன செய்வது என தெரியாமல் புலம்புபவர்கள் ஏராளம்.
இது போன்ற நேரங்களில் வாஸ்துவை சரி பார்க்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் படுக்கையில் அடர்ந்து சாப்பிடும் வீடுகளில் வறுமை குடிக்கொள்ளும் என குறிப்பிடப்படுகின்றது.
எப்போதும் உணவருந்தும் போது தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் அமர்ந்து தன்னை விட சாப்பாட்டை ஒரு உயர்வான இடத்தில் வைத்தே சாப்பிட வேண்டும். இது நாம் உயிரை காப்பாற்றும் உணவுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய மரியாதையாகும்.
படுக்கை உறங்குவதற்கான இடம் இதில் அமர்ந்து சாப்பிடும் போது லட்சுமி தோவியின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். இதனால் வீட்டில் நிதி நிலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என வாஸ்து சாஸ்த்திரம் எச்சரிக்கின்றது.
படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் வீடுகளில் உறவுகளுக்கு மத்தியில் தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் என்பன நிறைந்திருக்கும். இது எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை அதிகரிக்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |