நீரிழிவு நோயாளிகளுக்கு உடனடி எனர்ஜி கொடுக்கும் இயற்கை பானம்....இனி ஒதுக்காதீர்கள்!
கரும்பு ஜூஸ் குடித்தால் உடலுக்கு உடனடி எனர்ஜி கிடைக்கும்.
கரும்பு ஜூஸில் சுண்ணாம்புச் சத்து மற்றும் பிற தாதுக்களுடன் சேர்ந்து அதிக அளவிலான குளுக்கோஸ் நிறைந்திருக்கிறது.
இந்த குளுக்கோஸ் மற்றும் இதர எலக்ரோலைட்டுகளும் சேர்ந்து உடலுக்கு உடனடி எனர்ஜியைக் கொடுக்கிறது.

இதிலுள்ள அதிக அளவிலான பிளவனாய்டுகள் புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடுகிறது.
குறிப்பாக விதைப்பை புற்றுநோய் பரவல் போன்று புற்றுநோய் செல்கள் பரவாமலும் பெருகாமலும் பார்த்துக் கொள்கிறது.
நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா?
பொதுவாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள்.
இதில் இனிப்பு அதிகம் உள்ளதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்று பயப்படுவார்கள். கரும்பு ஜூஸில் நேரடி சர்க்கரையில் இருப்பதை விட குறைவு.
அதிக குளுக்கோஸ் இருந்தாலும் நேரடி சர்க்கரையை விட கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு.
ஆரோக்கியமானதும் கூட.
நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படி தோன்றும்போது மற்ற ஸ்வீட் எடுத்துக் கொள்ளாமல் அதற்கு பதிலாக சிறிது கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.