யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது தெரியுமா? மருத்துவர் கொடுத்த எச்சரிக்கை
நம்மிள் பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று தான் கருவாடு.
மீன் சாப்பிடாதவர்களும் கருவாடு விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனின் கருவாடு எப்படி சமைத்தாலும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
ஆனாலும் குறிப்பிட்ட சிலர் கருவாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கடைகளில் விற்கப்படும் துண்டு கருவாடு அதிகமாக சாப்பிடும் பொழுது சில நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பில் மருத்துவர் ஒருவர் பேசுகையில், “கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி கருவாடு சாப்பிடும் பொழுது அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், சரும நோய்கள், மூட்டு வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்கள் முடிந்தளவு கருவாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.” என கூறப்படுகிறது.
இது போன்று வேறு என்னென்ன விடயங்களில் மருத்துவர் எச்சரித்துள்ளார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
கருவாடு ஏன் சாப்பிடக்கூடாது?
1. கருவாடு சமைத்த பின்னரும் ஒரு வகையான உப்பு சுவை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இது உடலுக்குள் சென்று நீரை தக்க வைத்து ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இதனால் இதய நோயாளிகளுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கும் ஆபத்துக் கூட வரலாம்.
2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தம் பிரச்சினை ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என மருத்துவர் எச்சரிக்கிறார். இதனால் முடிந்தளவு இவர்கள் கருவாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
3. கருவாட்டில் உள்ள Purine யூரிக் அமிலமாக மாற்றமடைந்து மூட்டு வலியை அதிகரிக்கச் செய்யும். கால்சியம் சத்து உள்ளதாக நினைத்து பலரும் கருவாடு அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் அளவுடன் இருப்பது நல்லது.
4. கருவாடு நாளாக நாளாக அதன் புரதச்சத்து குறைந்து விடும். இதனால் மூச்சுத்திணறல், முகத்தில் வீக்கம், அரிப்பு, முகப்பருக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
5. கருவாடு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டியவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை தவிர்த்து மற்றவர்கள் குறைந்த அளவில் எடுத்து கொள்வது அவசியம். உடலில் தீக்காயங்கள் மற்றும் நோய் அபாயம் இருப்பவர்கள் உரிய மருத்துவரிடம் பரிந்துரை செய்த பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும்.