விருந்தில் முதலில் வெள்ளரிக்காய், கேரட் வைப்பது ஏன்?
Wedding Feast Serve Cucumber, Carrot: திருமண நிகழ்வில் பரிமாறப்படும் உணவு விருந்தில் வெள்ளரிக்காய், கேரட் இவற்றினை முதலில் கொடுப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணம் இவற்றிற்கு சென்றால், உணவு பரிமாறும் போது வாழை இலையில், வெள்ளரிக்காய், கேரட் துண்டுகளை வைப்பார்கள்.

இவ்வாறு எதற்காக வைக்கப்படுகின்றது என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை துண்டுகளும் வழங்கப்படுகின்றது.
இதனை தொட்டுக் கொள்ளும் உணவாகவோ, சாப்பாடு வரும்வரை சாப்பிடும் சிற்றுண்டியாகவோ நினைத்ததுண்டு.
எதற்காக வைக்கின்றனர் தெரியுமா?
நார்ச்சத்து நிறைந்த காய்கறில் வெள்ளரிக்காய், கேரட் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. உணவிற்கு முன்பாக சிறிதளவு சாப்பிடுவதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.
ஆதலால் முக்கியமான உணவின் போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். திருமண விருந்து, உணவகங்களில் விருப்பம் போல் உணவு எடுத்துக்கொள்ளும் முறையில் இந்த பழக்கம் பயனுள்ளதாக இருக்கின்றது.

ஆனால் காய்கறிகளை சாப்பிடுவதால் அதிகப்படியான உட்கொள்ளும் பழக்கம் முழுமையாக மாறிவிடும் என்று கூற முடியாதாம்.
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் வெயிலில் பயணம் செய்து நிகழ்ச்சிக்கு வருவதால் வைக்கப்படுகின்றது.
அதே போன்று நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் குடல் இயக்கத்தினை சீராக வைக்க உதவுவதுடன், மலச்சிக்கலை தவிர்க்கின்றது. ஆனாலும் தண்ணீர் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

அதே போன்று உணவிற்கு பின்பு சிலருக்கு சர்க்கரை அளவு வேகமாக உயரும் என்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை முதலில் சாப்பிடுவது சிறந்தது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ-வாக மாறி கண் ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. மேலும் திருமண நிகழ்வில் உணவு பரிமாற நேரம் ஆகலாம். அதற்கான ஒரு உபசரிப்பு முறையாகவும் இதனை பார்க்கின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |