சாலையோரம் உள்ள மரங்களில் வெள்ளை அடிக்க இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்திருப்போம். பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இவ்வாறு அடிக்கடி பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பெரும்பாலான சாலைகளின் இரு புறங்களிலும் வரிசையாக மரங்கள் நடப்பட்டிருப்பதை அனைவருமே வியந்து பார்த்திருப்போம்.
அவ்வாறு நடப்பட்டிருக்கும் மரங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கின்றீர்களா? இதற்கு என்ன காரணம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விடயமாகவே இருக்கின்றது. இதற்கான விளக்கத்தை இந்த பதவில் பார்க்கலாம்.
என்ன காரணம் தெரியுமா?
சாலையோர மரங்களில் வெள்ளை நிறம் அடிப்பதற்கு பாதுகாப்பு நோக்கமே முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
சாலையோர மரங்களில் வெள்ளை அடிப்பதற்கு பொதுவாக சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. . மரத்திற்கு சுண்ணாம்பு பூசப்படும் போது அது மரத்தின் பட்டை வெடிக்காமல் பாதுகாக்க துணைப்புரிகின்றது.
மேலும் மரத்தை வலுவடைய செய்கின்றது. இவ்வாறு மரங்களில் வேர் வரை சுண்ணாம்பு பூசப்படுவதால் பூச்சி தாக்குதல் மற்றும் கரையான் கூடு கட்டுதல் போன்றவற்றில் இருந்த மரங்களை பாதுகாக்க முடிகின்றது.
இதனால் மரங்களின் ஆயுட்காலமும் அதிகரிப்பதாக கூறப்படுகின்றது.மரங்களில் வெள்ளை நிறம் அடிக்கப்படுவதால் சூரியனின் நேரடி கதிர்களால் சேதமடையும் வாய்ப்பு கணிசமாக குறைவடைவதாகவும் ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சாலையோர மரங்களுக்கு வெள்ளை நிறம் பூசுவதில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.
தெரு விளக்கு இல்லாத சாலைகளில் கூட மரங்களில் உள்ள வெள்ளை நிறம், மக்கள் மற்றும் வாகனங்களுக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவடைகின்றது.
சாலையோர மரங்களில் வெள்ளை நிறம் பூசப்பட்டுவதால் அது வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மரம், என்பதை தெரியபப்டுத்துவதற்கும் பொதுமக்கள் இந்த மரங்களை வெட்ட கூடாது என்பதை உணர்த்துவதற்கும் இந்த முறை கையாளப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |